தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு!

குடியாத்தத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-11 06:09 GMT

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் ஆகியோருடன், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, நத்தம் பிரதீஷ், அ.அன்பரசன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கண்ணன், எஸ்.பி.சக்திதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் அமலுவிஜயன், இ.பரந்தாமன் ஆகியோர் பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசுகையில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக முதலமைச்சர் கொண்டுவந்துள்ள திட்டங்களை வாக்காளர்களிடம் விரிவாக எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

முடிந்தவரை திண்ணை பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். குடியாத்தம் பகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்தால் குடியாத்தம் மட்டுமல்ல வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வினருக்கு போட்டியிட வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

Tags:    

Similar News