கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், தமிழக அரசு இதை விசாரிக்கும் என்பது பொய்யான நம்பிக்கை என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறினார்.
விஷ சாராய பலி வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு புதன்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசியது. ஏற்கனவே மரக்காணம் மற்றும் விழுப்புரம் வழக்கு சிபிசிஐடி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக கோரிக்கையை முன்வைக்கிறது.
எத்தனால், மெத்தனால் தமிழகத்திற்குள் வராமல் இருப்பதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது என்று கேள்வி எழுப்பியவர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து மெத்தனால் எப்படி தமிழகத்துக்குள் வந்தது அதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது எனவும், கேள்வி எழுப்பினார். தமிழக அரசு இயங்காத காரணத்தால் தற்போது மக்களை பலி கொடுத்து விட்டோம். 2023 அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் பெருமளவு புழக்கத்தில் உள்ளதால் அது குறித்து விவாதிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ முன்னதாகவே புகார் வைத்திருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சபாநாயகர் ஏன் இதுவரை இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை அரசியல் கவனத்திற்கு ஏன் சபாநாயகர் கொண்டு செல்லவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்குப் பிறகும் தமிழக அரசு இந்த வழக்கை விசாரிக்கும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.