சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

Update: 2023-11-29 15:30 GMT

சங்க பேரவை கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க சேலம் மாவட்ட பேரவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மணி செல்வம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செயலாளர் லதா வரவேற்புரை ஆற்றினார்.

மாநில செயலாளர் பி. மகேஸ்வரி துவக்க உரையாற்றினார்.மாவட்ட அமைப்பாளர் அமராவதி வேலை அறிக்கையையும் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தார். தமிழக முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்ற பெயரில் மாதம் ரூபாய் 2000 வழங்குவதை ரத்து செய்து அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு தற்சமயம் நடைமுறையில் உள்ள ஓய்வு கால பலன் அமைப்பாளர்களுக்கு ஒரு லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமாக வழங்க வேண்டும்.

காலியாக உள்ள சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News