மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தலைமையில் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மவ்லானா ஆசாத் கல்வி சங்கத்தை அராஜகமாக கலைத்தும், உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிய வாகீல் ஹசன் வீட்டை அராஜகமாக இடித்தும், வழிபாட்டு தலங்களை அராஜகமாக இடித்து தள்ளியும், விசாரணை என்ற பெயரில் உலமாக்களை அராஜகமாக கைது செய்து சிறுபான்மை முஸ்லிம்களை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ஊடகவியலாளர் செந்தில் வேல் உட்பட இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.