பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது!!

பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-09-24 08:36 GMT

mohan g

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது. மோகன் ஜி. பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது. மோகன் ஜி கைது தொடர்பாக போலீஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன், இயக்குனர் மோகன் ஜி தமிழக போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், மாட்டுக்கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான மோகன் ஜி வெளியிட்ட வீடியோ அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News