குடும்ப பிரச்சனையால் பெண் காவலர் தற்கொலை
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, தலைமை காவலர் கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியகலா ( வயது 38). இவர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இவரது கணவர் நந்த கோபாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் உள்ளார்.கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்ட காரணத்தினால் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்ட கரம் கீழத்தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் சத்தியகலா மகனுடன் வசித்து வந்தார். தூக்கு போட்டு தற்கொலை கடந்த 23-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சத்தியகலா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
அப்போது அருகே உள்ளவர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி சத்தியகலா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது சத்தியகலா தனது குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.