சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.56,800-க்கு விற்பனை!!

Update: 2024-10-02 08:23 GMT

தங்கம் விலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ௪௦௦ ரூபாய் அதிகரித்து 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது. அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையாகிறது. 

Tags:    

Similar News