தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனை!!

தங்கம் விலை வார இறுதி நாளான இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது.

Update: 2024-10-05 04:59 GMT

தங்கம் விலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை வார இறுதி நாளான இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,120-க்கும் ஒரு சவரன் ரூ.56,960-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் ஒரு சவரன் (22 காரட்) செப்டம்பர் 29-ந்தேதி ரூ.56,760-க்கும், 30-ந்தேதி ரூ.56,640-க்கும், அக்டோபர் 1-ந்தேதி ரூ.56,400-க்கும், 2 மற்றும் 3-ந்தேதிகளில் ரூ.56,800-க்கும், நேற்று ரூ. 56,960-க்கும் விற்பனையானது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News