பள்ளி விழாவில் பா.ம.க. துண்டுடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரம்; தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!!

பள்ளி விழாவில் பா.ம.க. துண்டுடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.;

Update: 2025-03-08 07:16 GMT

அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஏன் எனக்கு உலக மொழி தேவை. நாங்கள் மொழிபெயர்ப்பாளரையா உருவாக்க போகிறேன். நான் ஒரு விஞ்ஞானியை உருவாக்க ஆசைப்படுகிறேன். நல்ல மருத்துவரை, நல்ல பொறியாளரை உருவாக்க ஆசைப்படுகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து அப்படி தான் செய்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் இருமொழிக்கொள்கையை படித்து விட்டு தானே இருக்கிறோம். நம்முடைய பிள்ளைகளும் அப்படி படிக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறோம். எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால் அது option-ஆ இருக்கணுமே தவிர Compulsion-ஆ இருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர், எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை மையப்படுத்தி, அதை கற்றுக்கொண்டால் தான் பணம் தருவேன் என்று சொல்வது கிட்டத்தட்ட பிளாக்மெயில் மாதிரி உள்ளது என்று சொல்கிறார். போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளியில் பா.ம.க. துண்டுடன் நடனமாடின விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News