சுகாதார நடைபாதை திட்டம் - உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Update: 2023-11-04 09:21 GMT

உதயநிதி ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் “நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடப்போம், நலம் பெறுவோம் என்ற பெயரில் சுகாதார நடைபாதை திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. 

மழையையும் பொருட்படுத்தாமல் பெசன்ட் நகரில் 8 கி.மீ., சுகாதார நடைபாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

கடலூர் சில்வர் பீச்சில் இந்த திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்து பொதுமக்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News