வேலூர் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் செலவின முகவர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு

Update: 2024-04-04 16:34 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் செலவின முகவர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் மனுதாக்கல் செய்த நாள் முதல் நேற்று வரையிலான செலவின கணக்குகளை நாளையும் (வெள்ளிக்கிழமை), இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற 8-ந் தேதி வரையிலான செலவின கணக்குகளை வருகிற 10-ந் தேதியும், வருகிற 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலான செலவின கணக்குகளை 16-ந் தேதியும் வேலூர் கலெக்டர் அலுவலக 5-வது கூட்டரங்கில் தேர்தல் செலவின பார்வையாளர்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய மற்றும் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் காலையிலும், மற்ற வேட்பாளர்கள் மாலையிலும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இறுதியாக செய்யும் கணக்குகளை ஜூலை 5-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செலவின முகவர்கள் தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட உரிய பதிவேடுகள், படிவங்கள், வங்கிக்கணக்கு அறிக்கைகள், செலவினங்களுக்கான உரிய ரசீதுகள், அனுமதி கடிதங்கள், ஆவணங்களுடன் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News