அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம்

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-06-21 11:41 GMT

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அரியலூர், ஜூன்.22 - உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித் பள்ளி தலைமையாசிரியர் முல்லைக்கொடி யோகா தினத்தை பற்றி உரையாற்றினார் , மாணவி சினேகாமதி யோகா பற்றி பேசினார், மேலும் மாணவிகள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்த யோகாவை கற்றுக்கொண்டு தினசரி யோகா செய்து வர வேண்டும்.

அப்போது படிப்பிலும் உயரமுடியும் என தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தஞ்சாவூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி தனது தந்தை நினைவு நாளை முன்னிட்டு (2023-2024)ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் முதல் முன்று இடம் பிடித்தமாணவிகள் மணிமொழி,நளினி, ஓவியா,மற்றும் பத்தாம் வகுப்பில் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பரணிகா,பவித்ரா, ஆர்த்தி ஆகியோருக்கு தலா ரூ ஆயிரம் பரிசு வழங்கி மாணவிகளை பாராட்டினார், இந்த பரிசுத்தொகை கிடைக்க காரணமான ஆசிரியர் பாவை .சங்கரை தலைமையாசிரியர் பாராட்டி சிறப்பித்தார்.

நிகழ்வில் ஆசிரியர்கள் மணிவண்ணன், இங்கர்சால், செல்வராஜ், சாந்தி, தமிழரசி, அருட்செல்வி சுரும்பார்குழலி, அகிலா, இரஜசேகர், தமிழாசிரியர் இராமலிங்கம், காமராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர், முடிவில் கணித ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்

Tags:    

Similar News