ஈஷா மையம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி

Update: 2024-06-25 11:12 GMT

துரைமுருகன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈஷா யோகா மையம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கேள்விஎழுப்பியுள்ளார்.

சட்டசபை  கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆசன் மவுலானா, கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டு என்கிறார்களே! இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தனின் கருத்தை அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட அப்பாவு, இதெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுதி கொடுத்திருந்தால் விவாதிக்கலாமே என சொன்ன போது அமைச்சர் மதிவேந்தன் எழுந்து நின்று, யானைகளின் வழித்தடம் குறித்து பெரும்பாலானோருக்கு பாதியளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. அதனால்தான் யானைகள் வழித்தடம் குறித்து நான் விளக்கிக் கொண்டிருந்தேன்.

அதற்குள் உறுப்பினர் ஈஷா மையம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிய முதல்வர் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை வைத்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். யானை நிபுணர்களையும் வைத்தும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், உறுப்பினர் கேட்ட கேள்வி, யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பதுதான். இதை அமைச்சர் வாயிலாக நேரடியான பதிலை அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் அதே பதிலை தெரிவித்தார். அதற்கு துரைமுருகன், "பத்திரிகை செய்திகளில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வருகின்றன. எனவே வனத்துறை அமைச்சகம் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னுமா ஆய்வு செய்யவில்லை. ஏன் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இரு அமைச்சர்களிடையே வாக்குவாதம் எழுந்தது போல் இருந்தது. 

Tags:    

Similar News