கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் - 49 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-06-21 03:17 GMT

பைல் படம் 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பிள்ளை, ராஜா, பாலு, சோலைமுத்து உள்ளிட்ட மேலும் 7 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில்- 27 பேரும், சேலத்தில் - 15 பேரும், விழுப்புரத்தில் - 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் - 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 89 பேருக்கு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News