பழனியில் கந்தசஷ்டி துவக்கம்
Update: 2023-11-14 05:15 GMT
கந்தசஷ்டி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விமர்சையாக கொண்டாடப்பட கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மலைமீது உள்ள முருகன் கோவில் உச்சிகால பூஜைக்கு பிறகு முருகன் , துவாரபாலகர்,மயில் மற்றும் நவவீரர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது. 18ஆம் தேதி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 19ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விரதம் தொடங்கியது.