கனிமொழியின் கோட்டையான தூத்துக்குடி - எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் காலி

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2024-06-05 07:38 GMT

கனிமொழிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர், அருகில் அமைச்சர் கீதாஜீவன் 

14 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு 66.88% சதவீதம், 975468 வாக்குகள் பதிவு. கனிமொழி கருணாநிதி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கலைஞரின் மகளும், தமிழ்நாடு முதலமைச்சர் தங்கையுமான கனிமொழி போட்டியிட்டதால், இத்தொகுதி தமிழ்நாடு முழுதும் உற்றுக் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக மாறியது.கனிமொழி கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். மேலும், கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை கடந்த தேர்தலை விட 3,92,738 வாக்குகள் வித்தியாசம்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் அக்கா மகன் சிவகாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவீனா ரூத் ஜென் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரின் பிரச்சாரம் தூத்துக்குடி தொகுதியில் மட்டும் முடங்கி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, கரூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், தென் சென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார். மேலும், அங்குள்ள சங்கங்கள், வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். குறிப்பாக கோவை மற்றும் திருநெல்வேலியில், கனிமொழி கருணாநிதி பிரச்சாரத்திற்கு சென்ற பிறகு களம் இந்தியா கூட்டணிக்கு வேட்பாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதி செய்த பணிகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்றிய அரசாங்கம் தூத்துக்குடி வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பாஜகவிற்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தைத் தொகுதி முழுக்க மேற்கொண்டார். கூட்டணி பலம், கட்சியின் பலம், கனிமொழிக்கு எனத் தனிப்பட்ட ஆளுமையின் பலம் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக வின்ஃபாஸ்ட மின்வாகன தொழிற்சாலை, இந்தியாவில் முதன் முதலாக ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் சர்வேதேச பர்னிச்சர் பூங்கா, கோவில்பட்டி - லிங்கம்பட்டியில் 54 ஏக்கர் பரப்பளவில் ரூ. 25 கோடி மதிப்பில் SIDCO தொழிற்பேட்டை, குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம், 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய விண்வெளி தொழில் பூங்கா, தூத்துக்குடியில் 4.14 ஏக்கர் பரப்பளவில் ரூ. 32.5 கோடி மதிப்பில் மினி பார்க், வெள்ள மீட்பு நடவடிக்கைகள், ஏர்போர்ட் விரிவாக்கம், மேம்பாலங்கள், வ.உ.சி துறைமுகத்தில் புதிய வெளித்துறைமுக கொள்கலன் முனையம் ஆகியவை கனிமொழியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது.

மேலும், கொரோனா காலங்களில் வாழ்வதரைத்ததை இழந்த நாட்டுப்புற கலைஞர்கள்காக தொடர்ந்து 2 வருடம் நெய்தல் கலைப் பண்பாட்டுத் திருவிழா நடத்தி, அவர்களின் கலையும், வாழ்வதரைத்ததையும் மேம்படுத்தினார். உப்பு உற்பத்தியில்லாத காலங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2023 டிசம்பரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, உணவு, குடிநீர், மளிகைப் பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5,00,000, சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,00,000, குடிசை வீடுகளுக்கு ரூ. 10,000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக . 6000 விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு! ரூ.208 கோடி நிவாரணம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் ஆகிய நிவாரண உதவிகள் எனப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வெள்ள நிவாரணங்கள் கனிமொழி பெற்றுத் தந்துள்ளார். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, அங்கன்வாடி மைய கட்டிடங்கள், நூலக கட்டிடங்கள், சமுதாயநலக் கூடங்கள், பேருந்து நிழற்குடைகள், பேருந்து நிலையம், நியாய விலைக்கடை கட்டிடங்கள், கலையரங்கங்கள், உயர்மின் கோபுர விளக்கு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

Tags:    

Similar News