2014ல் பறிமுதல் செய்த மதுபானங்கள் தற்போது சாக்கடையில் கொட்டி அழிப்பு

சேலத்தில் 2014ல் பறிமுதல் செய்த மதுபானங்கள், தற்போது சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டன.

Update: 2023-12-07 10:31 GMT

சேலத்தில் 2014ல் பறிமுதல் செய்த மதுபானங்கள், தற்போது சாக்கடையில் கொட்டி அழிக்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சந்துக்கடை மூலம் விற்பனை செய்த மது பாட்டில்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பிராந்தி, விஸ்கி போன்ற 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை நீதிமன்றம் அழிப்பதற்கு உத்தரவிட்டது. இதையடுத்து செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் இன்று மதுவை சாக்கடையில் ஊற்றி அழித்தனர். மதுவை அழித்ததற்கான வீடியோவையும் அந்த காலி மது பாட்டில்களையும் நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ' எனவே, போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
Tags:    

Similar News