பெண்கள் பாதுகாப்புக்கு அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது- தமிழக அரசு

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2024-06-25 08:19 GMT

 தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 2028 பெண்கள் தங்கும் விடுதி சமூகநலதுறையால் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இலவச பேருந்து வசதி, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News