பிரதமர் மோடிக்கு அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு!

தூத்துக்குடி வருகை தந்தை பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல். முருகன், அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

Update: 2024-02-28 09:08 GMT

தூத்துக்குடி வருகை தந்தை பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல். முருகன், அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News