வேலூரில் இரு இடங்களில் பணம் பறிமுதல்!

வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரு இடங்களில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 லட்சம் பணம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 04:53 GMT

பறக்கும் படை

வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் கருகம்புத்தூரில் இருந்து அலமேலுமங்காபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயன் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல வேலூர் கோட்டை பின்புறத்தில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கொணவட்டம் பகுதியை சேர்ந்த சையத் அக்பர் பாஷா என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இரு இடங்களில் பறிமுதல் செய்த பணம் ரூபாய் 5 லட்சத்து 3 ஆயிரத்தை வேலூர் கோட்டாட்சியர் கவிதாவிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News