இளையராஜா மகள் மறைவு- நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-01-26 00:46 GMT
தமிழச்சி தங்கபாண்டியன்
இசைஞானி இளையராஜாவின் மகளும், தனது மனதை வருடும் குரலால் தமிழ் மக்களை மகிழ்வித்தவருமான பாடகி திருமதி. பவதாரினி மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. தேசிய விருது பெற்ற, 'மயில் போல பொண்ணு ஒன்னு.' பாடல், தமிழ் ரசிகர்களை, காலம் கடந்தும், பரவசப்படுத்திக் கொண்டேயிருக்கும். அவரது, மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும். அவரை இழந்து வாடும் இசைஞானி திரு. இளையராஜா - குடும்பத்தினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு, என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.