உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

தமிழில் உள்ள தேர்தல் பிராமண உறுதிமொழியை வாசிக்க திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-03-26 08:57 GMT

வாசிக்க உதவி செய்த ஆட்சியர் 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெகதீஷிடம் வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தை படிக்க கொடுத்த போது அதை படிக்க முடியாமல் திணறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க ஜெகதீஷ் உடன் வாசித்தார்.அப்போது அங்கு பரபரப்பு காணப்பட்டது. தமிழ் மொழியில் உள்ள உறுதிமொழியை கூட படிக்க தெரியாத நாம் தமிழர் வேட்பாளரின் வீடியோ தற்ப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Tags:    

Similar News