அரியலூர் அருகே புகையிலை விற்றவர் கைது
அரியலூர் அருகே புகையிலை விற்றவர் கேரளா பாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-11 15:46 GMT
புகையிலை
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ்ஐ அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று கயர்லாபாத் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தலையாரிகுடிகாடு கிழக்கு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் கொளஞ்சி(49)என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கொளஞ்சியை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்