திமிரியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
திமிரியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் கீழ்பாடி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு 11 மாதங்களுக்கான ஊதியத்தொகை ரூ.18,98,050 ஒன்றிய பொது நிதியிலிருந்து திமிரி ஊராட்சி ஒன்றிய பள்ளி கழிவறை கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா நோய் தொற்று வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், அதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்து வைத்தனர். மழை வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களை போர்க்கால அடிப்படையில் பாதுகாத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.