அதிமுக சார்பில் சேலம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் நீக்க கோரி மனு

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதி மற்றும் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனுக்களை ஏற்ற மாவட்ட ஆட்சியர்களை நீக்க புகார் மனு கொடுத்தனர்.

Update: 2024-03-30 16:49 GMT

அதிமுக நிர்வாகி

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, எம். ஆர். கே பன்னீர் செல்வம், சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்றார். த

மிழ்நாட்டில் தேர்தல் நியமாக நடைபெறுகிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி இரு வழக்களில் தண்டனை பெற்றுள்ளார். ஆனால் அதை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே அதை நிராகரிக்க வேண்டும். அதை சேலம் மாவட்ட ஆட்சியர் செய்யவில்லை.

அதே போன்று அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது கோர்ட் fee stamp மூலம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அதை ஏற்றுக்கொண்டு உள்ளார். அதிகாரிகள் தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். சேலம் மற்றும் கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாற்ற வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம் அவர்களை மாற்றவில்லை என்றால் தேர்தல் எப்படி நியமாக நடக்கும். எ

ம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தர்மபுரியில் மதுபான விருந்து நடத்தி பணம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News