பிரதமரிடம் மனு - பால் கனகராஜ்

சென்னை வரும் பிரதமரிடம் வட சென்னையில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனுவாக அளிக்கப்படும் என்று பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-09 00:45 GMT

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கொளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர்களுடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 50 திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து, பேசினார், கடந்த 50 ஆண்டுகளாக மிக பெரிய பிரச்சனை கச்சத்தீவு தான். இதில் திமுகவும் காங்கிரசும் மௌனமாக இருந்து வந்தனர். தற்பொழுது அதை பற்றி பாஜக ஏன் பேசுகிறது என்ற கேள்விக்கு , கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி நமது நாட்டின் ஒரு பகுதி அதை காங்கிரஸ் கட்சி விட்டு கொடுத்தது. காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நாட்டின் ஒரு பகுதிகளை சீனாவும் நாட்டின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கொடுத்தது போல கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ் கட்சி என கூறினார். காங்கிரஸ் இதற்கு நாட்டு மக்களிடம் பதில் அளிக்க வேண்டும். நேரு, இந்திரா காந்தி நாட்டை ஆளும் போது நாட்டின் நிலப்பரப்பை விட்டுகொடுத்தார்கள். இந்தியாவை பாதுகாக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை இதற்கு திமுகவும் காங்கிரசும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் ஏன் திமுக அமைதியாக இருக்கிறது ஓட்டு வங்கிகாக திமுக மவுனமாக இருக்கிறதா? எனவும் திமுக நண்பர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என நான் கேட்கிறேன் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் மக்களுடைய வரவேற்பு உற்சாகமாக உள்ளது, தமிழக மக்கள் ஏப்ரல் 19ஆம் தேதி பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் எனவும் மை சாய்ஸ் மோடி என மக்கள் கூறுவது எனக்கு கேட்கிறது எனவும் தெரிவித்தார்.

இந்த முறை கண்டிப்பாக பாஜக வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்யும். முதலமைச்சர் தொகுதியில் மோசமான நிலையில் காணப்படுவதாக குற்றம் சாட்டினார். பாஜக மாநில முதலமைச்சர்களின் தொகுதிகளுக்கு வந்து பாருங்கள் என தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் அதிகம் விரும்புகிறார். தமிழக மக்களின் கலை, பண்பாடு கலாச்சாரத்தை பிரதமர் மோடி விரும்புகிறார். அதனால்தான் காசி தமிழ் சங்கமத்தை இங்கே தொடங்கினார். அதேபோல புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல் வைக்கப்பட்டது என கூறினார். மோடி வருகிறார் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனராஜ், நாளை பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும். நாளை இந்த பகுதிகளில் உள்ள குறைகளை பிரதமரிடம் மனுவாக கொடுப்போம் என தெரிவித்தார். முதலமைச்சர் தொகுதியில் பல்வேறு குறைகள் உள்ளது. வடசென்னை மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் அதன் பின்னர் இந்த பகுதிகளில் உள்ள குறைகளை நேரடியாக மக்களிடம் சென்று கேட்டறித்து அதை சரிசெய்யப்படும் என கூறினார்.

Tags:    

Similar News