பாஜக விட்ட கயிற்றில் பம்பரமாய் சுழன்ற பாமக! வேடிக்கை பார்க்கும் அதிமுக!

Update: 2024-03-11 06:00 GMT

பாஜக - பாமக

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் ஓரளவுக்கு பேச்சுவார்த்தை இறுதியான நிலையில் கட்சி கூட்டணி பலமாக உள்ளது எனவும் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், பாஜக தரப்பில் இருந்து கூட பேச்சுக்கள் எழுந்து சர்ச்சையாகி வருகிறது.

அதிமுகவை பொருத்தவரையில் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது கூட்டணியில் உடன்பாடு இல்லாத நிலையில் பாமக மற்றும் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக பாமக கூட்டணியில் பாமக அதிமுகவிடம் 7 தொகுதிகளையும் ஒரு மக்களவைத் தொகுதியையும் வலியுறுத்தி வந்தது. ஆனால் பாமக கேட்ட ஒரு சில தொகுதிகளை தேமுதிகவும் கேட்டுள்ளதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பாமக பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நேற்றிரவு பாஜக பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது சென்னையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ராமதாஸ், அன்புமணியுடன் அண்ணாமலை, சீசன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாமக எதிர்பார்க்கும் தொகுதிகளை பாஜக கொடுத்துவிட்டால் அதிமுகவின் நிலை? கேள்விக்குறிதான்! மேலும் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News