பாமக வாக்கு சாவடி களப்பணியாளர்கள் சந்திப்பு கூட்டம்

புயல் பாதிப்பு மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்

Update: 2023-12-10 08:33 GMT

பாமக வாக்கு சாவடி களப்பணியாளர்கள் சந்திப்பு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட வாக்கு சாவடி களப்பணியாளர்கள் சந்திப்பு கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சாவடிகளில் பணியாற்றும் கள முகவர்கள், பா.ம.க.வின் சாதனைகள் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் பா.ம.க.வினால் மட்டுமே மக்களுக்கு நல்லதை செய்யும் திட்டங்களை 20 ஆண்டுகளாக எடுத்துக் கூறி வரும் நிலையை இப்போது மக்கள் உணர்ந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது , புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை அதிவிரைவு படுத்த வேண்டும் எனவும், மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு நோய் தொற்று இல்லா நிலையை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற சூழ்நிலைக்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணம் எனவும் அதற்கு துணையாக இருக்கும் அரசு அதிகாரிகளை சிறையில் அடைத்தால் மட்டுமே இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாது என்றார். மேலும் இது போன்ற மழை நீர் கடலில் வீணாவதை தவிர்க்க சென்னையை சுற்றியுள்ள 100 கிலோமீட்டருக்குள் புதிய அணை மற்றும் நீர்த்தேக்கங்களை உருவாக்க நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முயல வேண்டுமெனவும், பருவ காலநிலை மாற்றம் தற்போது அதி தீவிரமாகியுள்ள நிலையில் பொதுமக்களும் இதுபோன்ற நிலையை தவிர்க்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News