பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைப்பு

வரலாறு காணாத மழை காரணமாக பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.;

Update: 2023-12-28 06:10 GMT

  வரலாறு காணாத மழை காரணமாக பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிக்கை எண் 3 2023 மற்றும் 3 ஏ பார் 2023 இன் படி 7.1.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு, வரலாறு காணாத பெருமழை மற்றும் பாதிப்பு காரணமாக தென் மாவட்டத்திலுள்ள பணியின் ஆளுநர்கள் முதலமைச்சருக்கு அளித்த கோரிக்கையை ஏற்று தேர்வுகளின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்கள் தேர்வுக்கு தயாராவதற்கும் கால அவகாசம் வழங்குவதற்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 4.2. 2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 7.1.2024 அன்று நடைபெறுகின்ற மேற்கண்ட தேர்வுக்கான நுழைய சீட்டினை நாலு 2 2024 நடைபெற இருக்கும் தேர்வில் பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News