அதிமுக வேட்பாளர் ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம்!
அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 06:34 GMT
பிரேமலதா
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ எல் விஜயனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அரக்கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கூட்டணி கட்சி வேட்பாளர் எ.எல். விஜயனை பெருவாயான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.