பஞ்சிமிட்டாயில் ரொடமைன் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் - ஆய்வு உறுதி
சென்னையில் விற்கப்படும் பஞ்சிமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வு உறுதி. நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புதுறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை.
Update: 2024-02-16 10:33 GMT
புதுவையை தொடர்ந்து சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சிமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டது ஆய்வு உறுதி. கடந்த வாரம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் உணவுக்கு தகுதி இல்லாத கெமிக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட கூடாது என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை கெமிக்கல் பயன்படுத்தப்படும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரைத்த உள்ளது.