ஆர்.எஸ்.பாரதியின் நாய்கறி விவகாரம் - நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கண்டனம்

Update: 2023-11-08 09:55 GMT

இல.கணேசன் கண்டனம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

''தமிழகம் - நாகா மக்களுக்கு இடையிலான இணக்கத்தை கெடுத்து விட கூடாது. நாகாக்கள் அனைவரும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்எஸ் பாரதி கூறியது ஏற்புடையது அல்ல.

உணவு பழக்கத்தை வைத்து நாகா மக்களை அவமரியாதை செய்யக்கூடாது. தமிழர்கள் ஏராளமானோர் நாகாலாந்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். நாகா மக்களும் தமிழகத்தில் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார் என்பது உண்மைக்கு புறம்பானது. அவர் மீது நாகா மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை புறக்கணிக்க வேண்டும். அவரது செயல் தமிழக மக்களின் உண்மையான குரலை பிரதிபலிக்கவில்லை . ஆர்எஸ் பாரதி பேச்சை நாகா மக்கள் கண்டு கொள்ள வேண்டாம்''. இவ்வாறு அந்த அறிக்கையில் இல.கணேசன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News