கிராமப்புற அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-14 09:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் கோட்டை மைதானத்தில் கிராமபுற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற அஞ்சலகங்கள் அனைத்திலும் கணினி வசதி செய்து தரப்பட வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி முடிவுகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட 456க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்படாததால் கிராமப்புற மக்கள் அஞ்சல் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பாக ஓய்வூதியம், அஞ்சலக வங்கி பரிமாற்றங்கள் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதே போல் சேலம் தெற்கு கோட்டத்திலும் அஞ்சலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சலகங்கள் முழுவதும் செயல்படாததால் பணிகள் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

Tags:    

Similar News