டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை: தமிழக அரசு
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன. அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.