மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்பனை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Update: 2024-06-22 07:41 GMT

மெத்தனால்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றதும், சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக எச்சரித்தும் விற்பனையை கன்னுக்குட்டி தொடர்ந்ததாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த விஷ சாராயத்தை சாராய வியாபாரி ராமரின் தந்தை தான் முதலில் குடித்திருக்கிறார். தந்தை உயிருக்கு போராடியதை பார்த்ததும் தன்னிடமிருந்த மெத்தனால் சாராயத்தை அழித்த ராமர், மெத்தனால் கலந்திருப்பதை உணர்ந்த பின் சக வியாபாரிகளான கன்னுக்குட்டி உள்ளிட்டவர்களை எச்சரித்துள்ளார்.

கன்னுக்குட்டி தவிர மற்ற அனைவரும் தாங்கள் வைத்திருந்த விஷச் சாராயத்தை கீழே கொட்டி விட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தன்னிடமிருந்த 330 லிட்டர் விஷச் சாராயத்தில் 250 லிட்டர் வரை கன்னுக்குட்டி விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  கைதான மாதேஷிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகேயுள்ள தொழிற்சாலையில்  தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை வாங்கிய மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்றுள்ளார்.

சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்பனை செய்துவந்துள்ளார்  கோவிந்தராஜன்.

Tags:    

Similar News