கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரம்- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தாலிக்கயிறு அலங்காரத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Update: 2023-11-29 03:01 GMT
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாரியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு தாலிக்கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.