கஞ்சா விற்பனை செய்வார்கள் மீது கடும் நடவடிக்கை தேவை!
கஞ்சா விற்பவர்கள் கைது செய்யபட்டு சிறைக்கு சென்றால் 3 நாள்களில் வெளியே வந்து விடுகின்றனர். இதற்குசட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம் கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் "ஜி.எஸ்.டி.யில் வணிகர்கள் முறையாக கணக்கு காண்பித்த போதும், லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாக நோட்டிஸ் வருகிறது. மறு ஆய்வு செய்தால் எவ்வித பாக்கியும் இல்லை பூஜ்ஜியம் என்று வந்தாலும், இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து தீர்வு காண உள்ளோம் என்றும், வணிகத்துறை என்பது மத்தியரசு கையில் உள்ளது.
தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிக வரி செலுத்த ஒரு மாத கால அவகாசம் கேட்ட போது, மாநில அரசினால் தரமுடியவில்லை மத்தியரசு மூலமாக தான் ஒரு மாத காலம் அவகாசம் பெற முடிந்தது. ஆகவே சட்டங்கள் என்பது மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டால் தான் இடர்பாடுகளை களைய சரியாக இருக்கும் வணிக நல வாரியத்தில் இணைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி தந்துள்ளார்கள். ஆதனை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் மாநாட்டில் வலியுறுத்தள்ளோம், ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதல்வ உறுதியளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருக்கிறோம்,வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்க்க இருக்கிறோம்.
ஆகவே தான் மே 5ல் மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெறவுள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். ஊற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருள்களை தர வேண்டும்.அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்,வணிக நிறுவனங்களில் அமுலாக்கதுறையினர் ரெய்டு செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் பரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நியமான தரமான பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்பவர்கள் வியாபாரிகள் என்றும், கஞ்சா விற்பவர்கள் கயவர்கள், அவர்களுக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்,காவல்துறை அதிகாரிகள் அப்பழுக்கு இல்லமால் செயல்படுவார்களானால் 24 மணி நேரத்தில் கயவர்களையும் பிடித்து தண்டிக்க முடியும். கைது செய்யபட்டு சிறைக்கு சென்றால் 3 நாள்களில் வெளியே வந்து விடுகின்றனர். இதற்குசட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும், கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் யார் உற்பத்திசெய்து, விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கஞ்சா, போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பரபட்சம் இல்லமால் செய்ய வேண்டும்,ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டி பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கை வைப்பதில்லை.கை வைத்தால் சூடு விழுந்து விடும் என்று நினைக்கின்றனர்.சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபாரதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக் பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும், முறைப்படுத்த வேண்டும், தடை செய்யப்பட்ட பொருள்களை யாரூம் விற்பனை செய்யக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். தமிழகத்தில் ரௌடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தன் ரெடியிசம் ஒழியும், வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்டுகள், தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளதாக கூறினார்.