தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு தமிழ்நாடு‌ முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.

Update: 2024-05-11 02:29 GMT

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு தமிழ்நாடு‌ முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்.‌ மாண்புமிகு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது. திரு. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது.
Tags:    

Similar News