விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பதவியேற்றார் தாரகை.
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் எம்எல்ஏவாக பதவி இன்று பதவி ஏற்றார் . தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அப்போது உடன் இருந்தனர். தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் , விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி.
திமுக வேட்பாளர்களை விட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று அவர் எடுத்த நடவடிக்கைகளையும் முக்கியத்துவங்களையும் அனைவரும், அறிவோம். அதேபோல் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் நன்றி. இந்த தேர்தல் தமிழ்நாட்டில் மிகப் பெரிய செய்தியை தெரிவிக்கிறது, முதலமைச்சர் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்கு பதில் சொல்லி உள்ளது, மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் எங்கும் இல்லாத வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், இன்று விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவை தலைவர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டு உள்ளேன். காங்கிரஸ் கமிட்டியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு சாட்சியாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உறுதுணையாக இருந்து இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளதற்கு நன்றி. முதலமைச்சருக்கு இந்த தருணத்தில் முக்கியமாக நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
காங்கிரஸ் கமிட்டி என்னை வேட்பாளராக அறிவித்தாலும் திருநெல்வேலி முதலமைச்சர் கூட்டத்தில் தான் என்னை அறிமுகம் செய்தனர். அப்போது முதலமைச்சர் அவர் நிற்பதாக நினைத்து வாக்களியுங்கள் என்று கூட்டத்தில் பேசினார். வரலாற்று ரீதியான வெற்றியாக மக்கள் கொடுத்துள்ளார்கள். எனக்கு இருக்கும் இரண்டு வருடங்களில் முதலில் காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையாறு டேமில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இரண்டு யூனிட்டில் ஒன்று செயல் இழந்துள்ளது அதை முதலில் சரி செய்ய வேண்டும். தொகுதியில் முதலில் சாலை மோசமாக உள்ளது மக்களின் பிரதான தேவையாக உள்ள சாலை, குடிநீர் உள்ளவற்றை முதலில் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும்.
கடந்த சட்டமன்ற வேட்பாளர் என்ன செய்யவில்லை என்பது முக்கியமில்லை நான் என்ன செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன். பெண்கள் அரசியலில் அதிகம் ஈடுபடுவதை ஊக்குவிக்க மகிளா காங்கிரஸ் போன்ற திட்டங்கள் உள்ளன அதை ஊக்குவிப்போம். காங்கிரஸின் தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன அதில் இரு பெண்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது எப்போதும் போல் காங்கிரஸ் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.