சென்னை புறவழிச்சாலையில் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்
புறவழிச்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆரம்பக்கட்ட சாலை அமைக்கும் பணியினை தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ஆய்வு செய்த தலைமை செயலாளர்
இன்று (08.06.2024) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-61, லேங்ஸ் கார்டன் சாலை, மதுரவாயல்-துறைமுகம் புறவழிச்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆரம்பக்கட்ட சாலை அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், இணை ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் சரவணன்,வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் (பொது) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர் .