திருவெற்றியூர் பகுதியில் போலி நகை அடகு வைத்தவர் கைது!
திருவெற்றியூர் பகுதியில் போலி நகை அடகு வைத்தவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
Update: 2024-05-30 00:54 GMT
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு மாவட்ட வீதி பகுதியில் அடகு கடை வைத்திருப்பவர் பிரகாஷ். இவருடைய கடையில் காதர் மொய்தீன் என்பவர் போலி நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் அதே கடைக்கு போலி நகையை அடகு வைக்க வந்தபோது, பிரகாஷ் திருவொற்றியூர் போலீசில் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்து நகையை அடகு வைத்த காதர் மைதீனை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.