சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் பவுன் ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. படிப்படியாக தங்கத்தின் விலை அதிகரித்து மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டி பழைய நிலைக்கே வந்தது. அந்த வகையில், தங்கத்தின் விலை கடந்த 16-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் பவுன் ரூ.55 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. பின்னர், தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அந்த வகையில், சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டது. அதன்படி, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6 ஆயிரத்து 885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இந்த மாதத்தில் 2-வது முறையாக நேற்று தங்கம் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.97.50-க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.