பேருந்துகளில் முன்பதிவு காலம் 60ல் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பு!!
பேருந்துகளில் முன்பதிவு காலம் 60-ல் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-11-18 08:34 GMT
SETC
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயண திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி 18-ந்தேதி (திங்கட்கிழமை) இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது. பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.