பொது தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெறுவார் - வன்னியரசு

பொது தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என வன்னியரசு தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-24 12:20 GMT
வண்ணியரசு

தேர்தல் ஆணையம் மூலம் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக குளறுபடிகள் செய்ய முயற்சி செய்வதாக கூறி ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு திருமாவளவன் அறிவித்துள்ளபடி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பொது தொகுதி உட்பட நான்கு தொகுதியை திமுகவிடம் போராடி பெறுவோம் என்றார்.

விசிக கட்சிக்கு பொது தொகுதியில் வரவேற்பு உள்ளது,தலைவர் திருமாவளவன் கட்டாயம் இந்த முறை தேர்தலில் பொது தொகுதியில் இந்த தேர்தலில் நின்று கண்டிப்பாக வெற்றி பெறுவோம்

Tags:    

Similar News