கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக குமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

Update: 2023-10-22 14:32 GMT

சுற்றுலாப் பயணிகள் கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும் இங்குள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பலரும் விடுமுறையை கொண்டாடுவதற்காக கன்னியாகுமரியில் குவிந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு படையெடுத்தனர். சூரிய உதயத்தை பார்த்து ரசித்த பிறகு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் இன்று கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது. கடைகளில் வியாபாரமும் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News