ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Update: 2024-06-26 06:15 GMT

விஜய் வாழ்த்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ” இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, மாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News