அடையாளம் தெரியாத பெண்சடலம் மீட்பு
இறந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-16 01:11 GMT
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அரியலூர் அருகே பாலாம்பாடி கிராம வஞ்சத்தான் ஓடை அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக அரியலூர் நகர காவல் துறையினருக்கு இன்று தகவல் தரப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெண் சடலம் இருந்த இடத்திற்கு அருகே பெரிய கல் ஒன்று இருந்ததும், அதில் ரத்தகறை இருப்பதால் அவர் கொலை செய்யபட்டுள்ளரா என்றும், என்ன காரணத்திற்காக கொலை செய்யபட்டுள்ளார் என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.