உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் அரசின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

Update: 2024-07-05 16:21 GMT

குதிரை பந்தயம் மைதானம்

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. உதகையில் குதிரை ரேஸ்க்காக குத்தகைக்கு எடுத்த வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்திற்கு குத்தகை தொகை மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்தவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க உயர்நீமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் மேல்முறையீடு செய்தது.

820 கோடி ரூபாய் வரை குத்தகை நிலுவையில் உள்ள நிலையில் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், செந்தில் குமார் அமர்வு தெரிவித்தது.

Tags:    

Similar News