புதிய திராவிட கழகம் சார்பில் ஐம்பெரும் விழா; பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

ஈரோட்டில் புதிய திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-12-24 07:52 GMT

Puthiya Dravida Kazhakam

 ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் புதிய திராவிட கழகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா, 10 மற்றும் 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா, வேடர் குல மகள்கள் ஆடும் வள்ளி கும்மி, கம்பத்தாட்டம், கலை நிகழ்ச்சி 6-ம் மாநில மாநாடு தேதி, இடம் அறிவிப்பு மற்றும் ஸ்ரீ தலையூர் காளி திருக்கோவில் குறித்து முக்கிய அறிவிப்பு என ஐம்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புதிய திராவிடர் கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு அரசு சீர் மரபுநர் நல வாரிய உறுப்பினருமான ராஜ்க்கவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க மாநில தலைவர் கேபிள் கனேசன் வரவேற்றார்.


தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் பரதன், விடுதலைக் களம் கட்சி நிறுவனர் நாகராஜன், அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத் தலைவர் சதா நாடார், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன், தமிழக வீரசைவ முன்னேற்ற பேரவை மாநில தலைவர் தங்க தமிழ்ச்செல்வன், கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் பாபு பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக அன்பு முத்துமணி அவர்களின் துணைவியார் திருமதி வெள்ளிமணி கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் புதிய திராவிட கழக மாநில ,மாவட்ட , ஒன்றிய கழக நிர்வாகிகள் சுமார் மூன்று ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி 6-வது மாநில மாநாடு வரும் 2025 டிசம்பர் மாதம் 21ம் தேதி சென்னையில் 5 லட்சம் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்துவது என்றும், ஐம்பெரும் விழாவில் துவக்க நிகழ்ச்சியாக கொடுமுடி ஒத்தக்கடையில் பேரணி புறப்பட்டு விளக்கேற்றி மண்கரடு, அவல்பூந்துறை ஆகிய இடங்களில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அலுவலகங்களை நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர் திறந்து வைத்து தமிழக முழுவதும் ஒரு தொகுதிக்கு 10 அலுவலகங்கள் திறக்கப்படுவது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 மாடி கட்டிடத்திற்கு கொடிவேரி அணை கட்டிய பொங்காள்வான் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும், 


வேட்டுவ கவுண்டரின் உட்பிரிவுகளான வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேடன், மலைவாழ் வேட்டுவர், புன்னம் வேட்டுவக்கவுண்டர், பூலுவ வேட்டுவக்கவுண்டர், பூலுவர், பூலுவக்கவுண்டர், புன்னை வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், வேட்டைக்கார நாயக்கர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்களில் தமிழகத்தில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, டிசி) ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் எம்பிசி.,யாக வேட்டுவக்கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும், மேலும் அனைத்து பெயர்களையும் ஒருங்கிணைத்து வேட்டுவக்கவுண்டர் என்ற பெயரில் டிஎன்டி., ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கடந்த 2021 மார்ச் 26-ம் தேதி ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது கடை ஏழு வள்ளல்கள் ஒருவரான கொல்லிமலையை ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மாமன்னர் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.


இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் அதனை போர்க்கால அடிப்படையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைத்து தர வேண்டும், கொடிவேரி அணை கட்டிய கொங்காள்வானுக்கு கொடிவேரியில் வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும், திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகள் வழங்க வேண்டும், கொங்கு குணாளன் நாடாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், கோவை விமான நிலையத்திற்கு கோயம்புத்தூர் நகரத்தை உருவாக்கிய மன்னன் கோவன் பெயர் சூட்ட வேண்டும், வெஞ்சமாங்கூடலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் வீர வெஞ்சமனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், ஜேடர்பாளையத்தில் அணைகட்டி விவசாயத்தை பெருக்கிய அரையாநாட்டு மாமன்னன் அல்லாள இளைய நாயகருக்கு தை-1ம் தேதி நடைபெற உள்ள பிறந்தநாள் அரசு விழாவில் துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், வரும் 29-ம் தேதி கோவை கிணத்துக்கடவில் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டில் நிறுவனத் தலைவர் ராஜ்க்கவுண்டர் தலைமையில் 5000 பேர் கலந்து கொண்டு சிறப்பு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மொடக்குறிச்சி மத்திய ஒன்றிய செயலாளர் சரத்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News