கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?நீதிமன்றம் கேள்வி
தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் , ஓலைச்சுவடிகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 12:06 GMT
உயர்நீதிமன்றம்
கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகளை பாதுகாக்கக்கோரி உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் C.கனகராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் கல்வெட்டுகள் தனி இடத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது என்று மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இல்லாத இடங்கள் தவிர்த்து கோவில்கள், மலை, பாறை போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் அதையும் வெட்டி எடுத்துவிடுவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.